search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மாநகர போக்குவரத்து கழகம்"

    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நேற்று 471 புதிய பஸ்கள் விடப்பட்டன. ஆனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டும் விடப்பட்டுள்ளது. #Bus
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நேற்று 471 புதிய பஸ்கள் விடப்பட்டன.

    இதில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு (சென்னை) 60 பஸ்களும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு 103 பஸ்கள், சேலத்துக்கு 77 பஸ்கள், கோவைக்கு 43 பஸ்கள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்துக்கு 111 பஸ்கள், மதுரைக்கு 30 பஸ்கள், நெல்லைக்கு 46 பஸ்கள் புதிதாக விடப்பட்டுள்ளன.

    ஆனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டும் விடப்பட்டுள்ளது. கேளம்பாக்கத்தில் இருந்து பாரிமுனைக்கு புதிய பஸ் இயக்கப்படுகிறது.

    சென்னையில் பழைய மாநகர பஸ்கள் மற்றும் பழுதடைந்த பஸ்களை மாற்றி புதிய பஸ் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சென்னையில் ஓடும் மாநகர பஸ்களில் தினமும் 30 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    அதாவது சென்னை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் மாநகர பஸ்களை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 20 சதவீதம் பேர் சென்னை மாநகர போக்குவரத்து பயணிகள் ஆவர்.

    கடந்த ஜூலை மாதம் 515 புதிய பஸ்கள் விடப்பட்டன. தற்போது மேலும் 471 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இதுவரை விடப்பட்டுள்ள 986 புதிய பஸ்களில் சென்னை மாநகருக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டுமே கிடைத்துள்ளது.

    கடந்த 12 மாதங்களில் 250 பழைய மாநகர பஸ்கள் இயக்குவதற்கு தகுதியுடன் இல்லை என்று கண்டறியப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் 3,300 பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட 6 லட்சம் கிலோ மீட்டரை கடந்துள்ளது.

    இதையடுத்து அவசர தேவைக்காக 245 புதிய மாநகர பஸ்கள் தேவை என்று கேட்டுக்கொண்ட நிலையில் ஒரே ஒரு பஸ் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறும்போது, “சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 50 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அவை விரைவில் இயக்கப்படும். பஸ்களுக்கு பாடி கட்டும் பணிக்காக தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார். #Bus
    ×